கிளிநொச்சி – அக்கராயனில் மாறி அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தால் அவதி

கிளிநொச்சி – அக்கராயனில்

கிளிநொச்சி – அக்கராயனில் மாறி அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் கடந்த ஆட்சியின் போது, மத்திய அரசாங்கத்தின் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் குறித்த பாலம் அமைக்கப்பட்டது.

அக்கராயன் ஆற்றின் தாழ்பாலப் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பத்தாண்டுகளாக பொது மக்களினால் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அக்கராயன் ஆற்றின் வலதுகரை பகுதியில் புதிய பாலம் மாறியமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் அக்கராயன் ஆற்றின் தாழ்பாலப் பகுதியிலேயே அமைக்க வேண்டும். அக்கராயன் குளம் வான்பாய்கின்ற போது போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் கூட கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

அக்கராயன் கிழக்கின் மாணவர்கள் அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம், அக்கராயன் மகா வித்தியாலயம் என்பவற்றிற்கு செல்ல முடியாத நிலைமைகள் ஐந்து நாள்களுக்கு மேல் காணப்படும்.

இந்நிலையில் அக்கராயன் ஆற்றின் மேல் அமைக்கப்பட வேண்டிய மேம்பாலம் தற்போது அக்கராயன் குளத்தின் வலதுகரை வாய்க்காலின் மேல் மாறியமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அக்கராயன் பிரதேசத்தில் வாழ்கின்ற ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ச்சியாக வெள்ள அபாயத்தை மழை காலத்தில் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.