மணமேடையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை! அப்போது திருமணமே நின்று போகும் வகையில் நடந்த சம்பவம்

மணமேடையில் மணப்பெண்ணுக்கு

இந்தியாவில் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணப்பெண் கிளம்பி சென்றது மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாரான போது அங்கு வம்சி என்ற இளைஞன் குடிபோதையில் வந்து நான் தான் திவ்யாவின் காதலன் என கூறினார்.

இதை கேட்ட பிரவீன்குமார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் திவ்யா, வம்சியுடன் கிளம்பி செல்ல தயாரானார்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மணமகன், மணப்பெண் மற்றும் வம்சி என மூவரையும் விசாரித்தனர்.

அப்போது மணப்பெண் திவ்யா தான் வம்சியை காதலிப்பதாகவும் அவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

அதே சமயம் பிரவீன்குமார் பொலிசில், என்னை வம்சி கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என புகார் கூறினார்.

இது தொடர்பாக வம்சியை பொலிசார் விசாரித்தார்கள், மேலும் திவ்யா காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.