Kilinochchi NET

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்…!!

செட்டிகுளம் பெரியநொச்சிக்குளம் பகுதியில்

செட்டிகுளம் பெரியநொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மதியம் 2.30 மணியளவில் பெரிய நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

இதன்போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான பா.தியாகராசா ( வயது 59 ) என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

சடலம் அயலவர்களினால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.