Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது.
வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,நேற்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முழுமையான முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிாிவு தொிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 4 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 15 போ் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.
மேற்படி 15 போில் 10 போ் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 போ் நேற்றைய முன்தினமும், அதற்கு மூன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.
இந்நிலையில் குறித்த பகுதி நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏறத்தாழ300 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் முடக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முழுமையான முடக்கம் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.
இதேவேளை 9 முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.