Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வவுனியாவில் Solaris Energy pvt Ltd தனியார் நிறுவனத்தினால் 255 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
வவுனியாவில் இயங்கி வருகின்ற Solaris Energy pvt Ltd தனியார் நிறுவனத்தின் ஊடாக கோவிட் -19 பயணத்தடையால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குப்பட்ட 255 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Solaris Energy pvt Ltd (சூரிய கலம் மின்பிறப்பாக்கி விற்பனை) தனியார் நிறுவனத்தின் வவுனியா மாவட்ட கிளை மக்களின் நலன் சார் பல்வேறு சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமையுடன் அதன் ஒர் பகுதியாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகிளங்குளம் , கற்பகபுரம் , சாம்பல்தோட்டம் , பாலாமைக்கல், கன்னாட்டி , கிடாச்சுரி ,மணிப்புரம், பட்டக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 255 குடும்பங்களுக்கே இவ்வாறு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மக்களுக்கான உலர் உணவு பொதிகளை கிராம சேவையாளர்கள் , சமூக ஆர்வளர்கள் , நிறுவன ஊழியர்கள் இணைந்து வழங்கி வைத்தினர்.
அத்துடன் குறித்த தனியார் நிறுவனத்தினால் ஒட்டிசுட்டான் பகுதியில் 100 பயனாளிகளுக்கும் மற்றும் வன்னேரிக்குளம் பகுதியில் 70 பயனாளிகளுக்கும் 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.