Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வவுனியா கற்குளத்தில் 9 வயது சிறுவனின் உயிரை பலியெடுத்த கற்குவாரி மீண்டும் ஆரம்பிக்க திட்டம் : மக்கள் எதிர்ப்பு
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்குளம் 2ம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள கற்குவாரியில் கல் உடைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினையடுத்து குறித்த வேலைத்திட்டத்தினை உடனடியான நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கற்வாரியில் கல் உடைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதினையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்துள்ளாகியுள்ளனர். இதற்கு முன்னர் குறித்த கற்குவாரி இயங்கிய சமயத்தில் இவற்றிற்கு அருகேயிருந்த வீடுகள் பல சேதமடைந்திருந்துடன் அவ் கற்குவாரியில் தவறி வீழ்ந்து 9வயது சிறுவன் உயிரிழந்ததுடன் இவற்றிக்கு அருகாமையில் முன்பள்ளி , ஆலயம் என்பனவும் அமைந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்குவாரி இயங்குவதற்கு பல தடவைகள் முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் மீண்டும் கற்குவாரியினை இயக்குவதற்குறிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எனவே உடனடியாக கற்குவாரி மீள செயற்பட முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் , கிராம சேவையாளர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆசிகுளம் கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு வினாவிய போது,
இவ் கற்குவாரி முன்னர் செயற்பட்ட காலத்தில் கற்குவாரிக்கு அருகேயுள்ள வீடுகள் சேதமடைந்திருந்துடன் வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டாத மக்கள் எனக்கு பல தடவைகள் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இவ் கற்குவாரி மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் எனக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பிரதேச செயலாளருக்கும் தகவல் வழங்கியுள்ளேன்.
அத்துடன் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்றிட்டமும் எமது கிராமத்தில் முன்னெடுக்க அனுமதி வழங்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.