Kilinochchi NET

கிளிநொச்சி மாவட்டத்தில் தலைத்தூக்கும் கொரோனா : மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி

கிளிநொச்சி மாவட்டத்தில், நேற்றைய தினம் (14) 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட தொற்று நோயியல் பிரிவுதெரிவித்துள்ளது.

கிளிநொச்சி – ஜெயபுரம் வீதி அபிவிருத்தி பணிகளோடு தொடர்புபட்டவர்கள், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள புகைப்பட கலையகமொன்றின் ஊழியர், வட்டக்கச்சியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முழுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் சுகதார பிரிவு கோரியுள்ளது.