Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி உட்பட நாட்டில் 19 பேருக்கு டெல்டா வைரஸ் : அதிர்ச்சி ரிப்போர்ட்

இலங்கையில் மேலும் 19 பேருக்கு டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, பிலியந்தல, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் கடற்படை அதிகாரியொருவரும் உள்ளடங்குகிறார்.கடந்த தினங்களில் பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் நாட்டில் 38 பேருக்கு டெல்வா வகை கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.