ஸ்ரீலங்காவில் கொரோனா பரவும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவுவதால், ஸ்ரீலங்காவிலும் கொரோனாவுக்கு அதிக ஆபத்தில் உள்ளது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் இலங் கைக்கு வைரஸ் பரவக்கூடும் என அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவுவதால் இலங்கை இன்னும் முழுமையாக வைரஸிலிருந்து விடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வர்கள் என்றும் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங் களில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக் கை 2984 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.