Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

திருமுறிகண்டி பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற பாரிய விபத்து

திருமுறிகண்டி பகுதியில் பாரிய விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது. வானின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏ9 வீதியில் பயணித்த பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் மோதியுள்ளது. சம்பவத்தில் வான் பலத்த சேதங்களிற்கு உள்ளான போதிலும் வானில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டனர்.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து குறித்த கனரக வாகனம் வீதிக்கு குறுக்கே நின்றமையால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.