இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

நாட்டில் தற்போது விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வாகனங்களின் பங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி. ஜயசுந்த அளித்த அறிக்கையை சரிபார்க்க இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்கள் கூட்டாக இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருவதாகவும், விற்பனையாளர்களுக்கு தற்போதுள்ள வாகன பங்குகளை விரைவில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின்படி, தற்போது நாட்டில் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பங்கு குறித்த துல்லியமான தரவுகளை கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த வாரத்திற்குள் தரவு சேகரிக்கப்படும் என்றும், அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் வாகன விற்பனைத் துறையில் எதிர்காலத் திட்டங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளனர்.