Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர வி பத்து : குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வி பத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிய திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்தை அதே திசையில் பயணித்த மற்றொரு டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார சைக்கிளை மோ தியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் பிரசன்னா (வயது 30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே ப டுகாயம் அடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சி கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.