Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

150 பேருடன் திருமண நிகழ்வு , கருத்தரங்குகள் 50 பேருடன் , வழிபாட்டுத் தலம் அனுமதி வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி

நாட்டில் கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டிருந்த சுகாதார கட்டுப்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்று (10) முதல் தளர்த்தப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

25 வீதமானோர் அமரக்கூடிய இடமொன்றில் 150 பேருடன் திருமண நிகழ்வுகளை நடத்தலாம்.

செயலமர்வு , மாநாடுகள் , கருத்தரங்குகள், விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகள் 50 பேருடன் வரையறுக்கப்பட்டு நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.