Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் 5842 பேரூக்கு தடுப்பூசி ஏற்றி முடிந்து விட்டதாம் : பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி

கிளிநொச்சியில் 5842 பேரூக்கு தடுப்பூசி ஏற்றி முடிந்து விட்டதாம் : பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி

கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று வரை, 5,842 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

சுகாதார பணியாளர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் என 5,011 பேருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் 831 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதில், சுகாதார பணியாளர்கள் 781 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.