Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
எல்லைக்கிராம மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு
எல்லைக்கிராம மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன், படுக்கையில் உள்ள நோயாளர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொண்வதற்காக அழைத்துச்செல்லுமாறு கூறினால், நோயாளர் காவுவண்டியில் ஏற்றிச்சென்று, தடுப்பூசி வழங்க ஏற்பாடுசெய்யப்படும் என்றும் கூறினார்.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், முன்னிலை பணியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 12ஆம் திகதிக்குப் பின்னர், அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
தடுப்பூசியால், இதுவரை பக்க விளைவுகள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த நிலையில் மக்கள் அனைவரும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த நாள்களில், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதில், சிலர் ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் கூறினார்.
இதேவேளை, மாவட்டத்தில் நோய்த்தாக்கம் இல்லாத நிலையில் அடுத்தகட்டம் நோய்த்தா க்கம் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்த அவர், அடுத்த தடவை இதைவிட மோசமானதாகக்கூட இருக்கலாம் என்றும் கூறினார்.
அடுத்தகட்ட தடுப்பூசி, எதிர்வரும் 12ஆம் திகதியளவில் கிடைக்குமென்றும், கிடைத்தவுடன் பிரதேச வைத்தியசாலை, தள வைத்தியசாலை, பொது வைத்தியசாலை மற்றும் தூர இடங்களில் உள்ளவர்களிற்கு பொது இடங்களிலே தடுப்பூசியை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவர் கூறினார்.
‘இங்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகில் உள்ள நிலையங்களில் வந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படும்போது அறிவிக்கப்படும். இதேவேளை, இந்த மாவட்டத்தில் நீண்ட காலமாக தற்காலிகமாக வந்து தங்கியுள்ளவர்களும் தடுப்பூசியை இங்கு பெற்றுக்கொள்ளலாம். அதன்போது, பிரதேசத்துக்குக் பொறுப்பாக உள்ள கிராம சேவையாளரை தொடர்புகொண்டு உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம்.
‘அத்துடன், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டத்தின் எல்லை கிராம மக்கள் தூர வசதியை கருத்தில் கொண்டு, எமது மாவட்ட வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றக்கொள்வது வழமை. இதற்கமைய, அவர்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளைசெய்யலாம் என்று நாங்கள் யோசித்துள்ளோம்.
மேலும், ‘நோய்வாய்ப்பட்டு அல்லது, வயது முதிர்ந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் யாராவது இருந்தால், பிரதேச வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றப்படும்போது எமக்கு தகவல் வழங்கினால், நோயாளர் காவு வண்டி மூலம் அவர்களை அழைத்து வென்று, தடுப்பூசியை வழங்க முடியும்’ என்றும், அவர் தெரிவித்தார்.