கிளிநொச்சி இடைப்போக நெற்செய்கையில் நோய்த் தாக்கம்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இடைப்போக நெற்செய்கையில், நோய்த் தாக்கம் கூடுதலாகக் காணப்படுவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

123 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கதிர்ப் பருவத்தில் நெற்செய்கை காணப்படுகின்ற போதிலும், பெருமளவிலான கதிர்கள் வெண் சப்பியாக காணப்படுவதாகவும் இதனால் அறுவடையில் பாதிப்புகள் உருவாகலாம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மருந்துகள் விசிறப்பட்ட போதிலும் வெண் சப்பியினைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனவும், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.