Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் அழிவின் விழிப்பில் விவசாயம் : கட்டுப்படுத்தப்படுமா ச ட்டவிரோத செயற்பாடு

கிளிநொச்சியில் அழிவின் விழிப்பில் விவசாயம் : கட்டுப்படுத்தப்படுமா சட்டவிரோத செயற்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பிரதேசத்தில் ச ட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம் பவங்களும் அதிகரித்துள்ளதாக உமையாள்புரம் மக்கள் அ ச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே, கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் ச ட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதால் எதிர்காலத்தில் விவசாயம் முற்றாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உமையாள்புரம் பிரதேசம் ஆணையிறவு கடல் நீரேரிக்கு அருகில் உள்ள கிராமத்திலும், ச ட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ச ட்டவி ரோத மணல் அகழ்வு காரணமாக வா ள்வெ ட்டு ச ம்பவங்களும், குழு மோதல்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே உமையாள்புரம் கிராமத்தை பாதுகாக்க தவறும் பட்சத்தில், முழு கிராமமும் உவர் நிலமாக மாறிவிடும் அ பாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.