Kilinochchi NET

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்த தனியார் பேரூந்து : ஒருவர் காயம்

கிளிநொச்சியில் கடைக்குள் நுழைந்த பேருந்து!

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் சேதப்படுத்தி உள்ளது

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்றுமாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் அருகிலிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்