Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் (49) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.
விபத்து இடம்பெற்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை கைவிட்டு குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி வீதிக்கு வெளியே வாகனத்தை செலுத்தி வாகனத்துடன் தப்பி சென்றுள்ளார்.
உந்துருளியில் பயணித்தவரை பட்டா அல்லது மகேந்திர ரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது தலைப் பகுதியில் படுகாயமடைந்தவரை அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் அவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இறந்துவிட்டார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.