Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கோவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 18,243 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இங்குகின்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள், அரச திணைக்களங்களில் கடமையாற்றும் கள நிலை உத்தியோகத்தர்க்ள, ஊடகவியலாளர்கள் என 20.000இற்கும் மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்க வேண்டி உள்ளது.
கிடைக்கின்ற தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகள், பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.