Kilinochchi NET

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரிடம் இந்த வைத்திய உபகரணம் வழங்கிவைக்கபட்டுள்ளது..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.