கிளிநொச்சியில் பல லட்சம் பெறுமதியான முதிரை மர குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பூநகரி அரசபுரம் பகுதியிலிருந்து வாகனமொன்றில் முதிரை மர குற்றிகள் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட போது நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி தப்பி சென்றுள்ளார். சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைவாக குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.