Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி – முறிகண்டி அக்கராயன் வீதியில் நான்காம் கட்டை மற்றும் அதனை அண்டிய காடுகளில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு இடம்பெற்று வருகிறதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சிலர் கிரவல் அகழ்வதற்கான அனுமதியினை பெற்று கிரவல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு உரிய திணைக்களங்களால் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டே கிரவல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.எனினும் அந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அனுமதி வழங்கப்படுகின்ற போது கிரவல் அகழும் நேரம், அகழப்படும் பரப்பளவு, எவ்வளவு ஆழத்திற்கு அகழப்பட வேண்டும், பெறுமதி மிக்க பெரிய காட்டு மரங்கள் அழிக்கப்படக் கூடாது, மற்றும் அளவு உள்ளிட்ட விதி முறைகள் குறிப்பிடப்பட்டே கிரவல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் அனுமதியினை பெற்றவர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை எனவும், அனுமதியினை வழங்கிய திணைக்களங்கள் குறித்த விதி முறைகள் பின்பற்றப்படுகிறதாக என்பதனை கண்காணிப்பதும் இல்லை எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இந்த விதிமுறைகள் மீறப்படுவதனால் காடுகள் கண்டப்படி அழிக்கப்பட்டு வருகிறதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.