Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் மானிய உரம் வழங்குவதில் நெருக்கடி ; மாவட்டச் செயலாளர் விளக்கம்

கிளிநொச்சி மாவட்டத்துக்குத்

கிளிநொச்சி மாவட்டத்துக்குத் தேவையான உரம் கையிருப்பில் இல்லாத காரணத்தால், மானிய உரத்தை வழங்க முடியாதிருப்பதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மாவட்டத்தில், சிறுபோக செய்கைக்கான மானிய உரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாமையால், மானிய உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்றார்.

இருந்தபோதும், தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவர் கூறினார்.