Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடரப்பட்டுள்ள இரு வேறு வழக்கு விசாரணைகளும், ஜுன் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்துமாறு, கரைச்சி பிரதேச சபையாலும், பொதுமக்களாலும் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கரைச்சி பிரதேச சபையால், நேற்று (09), சமர்ப்பிக்கப்பட்ட மனு, இன்று (10), கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பா.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஆடைத்தொழிற்சாலைகளை மூடிதான் தொற்று நோயினை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற விளக்க அறிக்கையை கோரிய நீதவான், மனு மீதான விசாரணையை ஜுன் 15ஆம் திகதிக்கு ஒத்திதை;தார்.
இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சமூக தொற்று ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக ஆடைத் தொழிற்சாலையை மூடுமாறு, பொது மக்கள் 6 பேர், இன்று (10) சட்டத்தரணி ஊடாக மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
குறித்த மனுவினையும் ஏற்றுக்கொண்ட நீதவான், மனு மீதான விசாரணையை, ஜுன் 15ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.