Kilinochchi NET

கிளிநொச்சி வலைப்பாடு மக்களுக்கு தனியான கிராம சேவையாளர் பிரிவு? – மகிழ்ச்சியில் மக்கள்

கிளிநொச்சி வலைப்பாடு மக்களுக்கு தனியான கிராம சேவையாளர் பிரிவு?

கிளிநொச்சி – வலைப்பாடு கிராமத்துக்கென தனியான கிராம சேவையாளர் பிரிவொன்றை உருவாக்கி தருமாறு, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கஜன் இராமநாதன் எம்.பி வலைப்பாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தொகை இல்லாத கிராமமான பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் 400 குடும்பங்கள் உள்ளன.

இந்தக் கிராமத்தை தனியான கிராம சேவையாளர் பிரிவாக மாற்றி தருமாறு மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைனை கேட்டறிந்த அங்கஜன் எம்.பி எல்லை நிர்ணய குழுவிடம் குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுமெனக் கூறினார்.