Kilinochchi NET

கிளிநொச்சி சதொசவில் அனைவரும் பொருட்கள் வாங்கலாம் – கிளிநொச்சி நெற் செய்தியால் ஏற்பட்ட மாற்றம்!

கிளிநொச்சி சதொசவில் அனைவரும் பொருட்கள் வாங்கலாம் – கிளிநொச்சி நெற் செய்தியால் ஏற்பட்ட மாற்றம்!

கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் அரச ஊழியர்கள் மட்டும் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என்ற விதி மாற்றப்பட்டு அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

நேற்றைய தினம் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் அரச ஊழியர்கள் மட்டும் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என்ற புதுவிதி முகாமையாளரால் கொண்டுவரப்பட்டு, ஏனையவர்களுக்கு பொருட்கள் மறுக்கப்பட்டன.

இந்த அநீதிக்கு எதிராக கிளிநொச்சி நெற் இவ்விடயத்தில் தலையிட்டிருந்தது. இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கிளிநொச்சி நெற் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.