Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வீட்டு சூழலை சுத்தப்படுத்தினால்
உலக சுற்று சூழல் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுச் சூழல் தினத்தை அனுஷ்டிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. “சுவாசம் வழங்கும் சுற்றாடல்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாதத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் திகதி வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துவதனை வீடியோ எடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் ஒவ்வாரு 3 மணித்தியாலத்திற்கு ஒரு முறை 3 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் வரை பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.