Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 648பேருக்கு தொற்று 2069 தனிமைப்படுத்தலில் மாவட்டத்தில் ஒரு இறப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.
கிளிநொச்சிமாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து இதுவரை 648 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதுவரை 2069 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு இறப்பு பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகரட்ணம் சரவணபவன் தெரிவித்தார்.
புதுவருடத்திற்கு பின்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று கொத்தணி உருவாகியிருந்தது அதனை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மாவட்டத்தில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் பயணக்கட்டுப்பாட்டு நேரங்களில் கிராமங்களுக்குள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்
முக்கிய நிகழ்வுகள் தவிர்க்கப்படவேண்டும் இளைஞர்கள் கூட்டாக சேர்வதை தவிர்க்கவேண்டும் மக்கள் சுகாதார நடைமுறையைப்பின்பற்றி தமது அன்றாட தேவைகளில் ஈடுபடக்கூடியவாறு தொழில் நடவடிக்கை, விவசாயம், மீன்பிடி போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பாம்புக்கடிக்கான மருந்துத்தட்டுப்பாடு நிலவி வருகிறது கிளிநொச்சி மாவட்டம் அதிகளவு பாம்புக்கடிக்கு இலக்காகும் மாவட்டம் இலங்கையிலே குறிப்பாக அக்கராஜன் பிரதேசம் அதிகளவு பாம்புக்கடிக்கு உள்ளாகும் பிரதேசம் மக்கள் விழிப்புடன் நடக்க வேண்டும் இரவு நேரங்களில் வெளிச்சத்தைப்பயன்படுத்தி பாதுகாப்புடனும் விழிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்