Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 30 நாட்களில் மாத்திரம் 200 கோவிட் தொற்றாளர்கள் : சுகாதார பிரிவு எச்சரிக்கை
கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் மே மாதம் மாத்திரம் 200 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் அண்ணளவாக 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் கடந்த மாதம் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 1144 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 200 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 555 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 26 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4000 பேர் பணியாற்றுகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் 1699 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 200 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் குறித்த கிராம் கடந்த 29 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற இளையவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அது வீடுகளில் உள்ள முதியோர்களுக்கும் ஏற்படும். முதியோர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டால் அது சுகாதாரத் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனச் சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1500 பேர் பணியாற்றுகின்ற கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 283 பேருக்குத் தொற்று ஏற்பட்டு நோய் பரவும் விதமாகச் செயற்பட்டார் என தெரிவித்து அங்குள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களால் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் முகாமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தை கிளிநொச்சியின் சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விடயத்தில் மாவட்ட சுகாதாரத் துறை அதிகளவு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.