கிளிநொச்சியில் தனியார் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த வெடிகுண்டு மீட்பு

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவில் வயல் பகுதியிலிருந்து வெடிக்காத ஆர்.பீ.ஜீ குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டு நேற்றைய தினம் தனியார் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காணியின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த போது வெடிக்காத நிலையில் குண்டு காணப்படுவதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் பளை பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த வெடிபொருளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.