Kilinochchi NET

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் தொடரும் பதட்டம் : 11 நபர்கள் வைத்தியசாலையில்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூழாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற உழவூர்தி மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டு வன்முறையில் முடிந்ததாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையோரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை காயம் அடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.