Kilinochchi NET

கிளிநொச்சியில் நிர்க்கதியாகியுள்ள சிறு விவசாயிகள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிளிநொச்சி மாவட்ட விசுவமடு பகுதியில் வெற்றிலை மற்றும் வாழை தோட்ட விவசாயிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விசுவமடு பகுதியில் வெற்றிலை மற்றும் வாழை செய்கையை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இவ்வாறான விவசாய நடவடிக்கைகளில் மட்டுமே தாம் ஈடுபட்டு வருவதாகவும் தற்பொது நாட்டில் அமுலில் உள்ள பயத்தடை காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வெற்றிலை மற்றும் வாழைகளை கோவில் மற்றும் நிகழ்வுகளுக்காக அதிகளவில் எடுக்கப்படுகின்றனர். இருப்பினும் தற்போது அவை யாவும் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு செல்ல பெரும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் நிலைமை தமக்கு நன்றாக புரிகிறது எனவும் தமக்கு சுகாதார நடைமுறைகளோடும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டும் தமது வியாபாரத்தை மேற்கொள்ளவும் ஏற்றுமதி செய்யவும் உதவுமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.