Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நாட்டு மக்களுக்கு அரசாங்கம் விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

கோவிட் வைரஸ் தொற்று காரணமாக பா திக்கப்ப ட்ட போதும், அரச கொடுப்பனவு கிடைக்காத நபர்களுக்காக விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களின் தகவல்கள் அடங்கிய பட்டியலை கிராமிய குழுக்கள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த பட்டியல் கிராமிய குழுக்கள் மூலம் பிரதேச செயலாளரிடம் வழங்க வேண்டும். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவையா என பாதுகாப்பு தரப்பினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

அதற்கமைய இந்த வாரத்திற்குள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.