Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி இயக்கச்சியில் கிணற்றை கையளியுங்கள் : பிரதேச சபை கோரிக்கை
கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குரிய கிணற்றை இராணுவத்தினர் பிரதேச சபையிடம் கையளிக்கவில்லை என, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தால் குறித்த கிணறு பிரதேச சபையிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் இராணுவமும் அந்தக் கிணற்றை பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை கிணறு கையளிக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.
இந்தக் கிணற்றில் இருந்து பிரதேச சபை குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் இராணுவத்தின் பொறுப்பில் குறித்த கிணறு தற்போது உள்ளதால், இராணுவமும் கூடுதலான நீரைப் பயன்படுத்துகின்றதெனவும், அவர் தெரிவித்தார்.
“குறித்த கிணறு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தால், வறட்சி காலங்களில் குடிநீர் விநியோகத்தினை இலகுவாக மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது குடிநீர் வழங்கலில் பிரதேச சபை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் ட்ரோன் கமராவின் உதவியுடன் பயணத் தடையை மீறுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: களமிறங்கிய விமானப்படையும் பொலிசாரும்