பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கம்பஹாவில் சுட்டுக்கொலை

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கம்பஹாவில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஷாமியா என்று அழைக்கப்படும் சமிந்த எதிரசூரிய என்பவரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழகம் கோயம்புத்தூரில் மரணமான அங்கொட லொக்காவின் கீழ் செயற்பட்டு வந்தவராவார்.

இந்தநிலையில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையின்போது அவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.