Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி கிராம அலுவலகரும் மனைவியும் மரணம் : நடந்தது என்ன?
முழங்காவில் – பல்லவராயன் கட்டுச் சந்தியில், நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில், கிராம அலுவலகர் ஒருவரும் அரவது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவிலில் கிராம அலுவலராகப் பணியாற்றிய பாலசிங்கம் நகுலேஸ்வரன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
நேற்று (25) இரவு 7 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, முழங்காவில் – பல்லவராயன் கட்டுச் சந்தியில் வைத்து, இவ்விருவரும் வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேசவாசிகள் இராணுவத்தின் உதவியுடன் இருவரையும் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன்போது, குறித்த கிராம அலுவலகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரு மனைவி அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துக்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த முழங்காவில் பொலிஸார் இவர்கள் விபத்தால் உயிரிழந்தனரா அல்லது அல்லது யானை தாக்கி இறந்தனரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.