அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் 156 விண்ணப்பங்களில் 40 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் 156 விண்ணப்பங்களில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு இந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிததுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியிருந்தமை காரணமாக 2017ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் 2020 ஜனவரியில் இருந்து அரசியல்கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டபோது 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.