வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

குற்ற செயல்களுக்கு தொடர்புடைய கும்பலை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரங்க பிரதிப் எனப்படும் வெல்வே சாரங்க மற்றும் மேலும் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் டுபாய் நாட்டிற்கு செல்வதற்கு ஆயத்தமாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் குற்ற செயல்ளுக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் அரச வங்கி கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.