வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பான தகவல்

நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுவரையில் விசேட விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்த வரும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தில் உள்ள குறைப்பாடுகள் ஆராய்ப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் நாளைய தினம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டிற்கு வர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலையும் இழந்து மிகவும் சிரமமான நிலைமையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தங்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து செல்லுமாறு அங்குள்ள மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலைத்தீவில் தொழிலை இழந்த இலங்கையர்களை அந்நாட்டுக்கான இலங்கை தூதகரம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.