இலங்கை இராணுவம் வடிவமைத்துள்ள நவீன அம்புலன்ஸ்!

இலங்கை இராணுவம் தற்போது பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறது. அவர்களின் சமீபத்திய வடிவமைப்பு உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்காக தயாரிக்கப்படும் போர் கள அம்புலன்ஸ் ஆகும்.

இந்த அம்புலன்ஸ்கள் ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

யுத்த கள அம்புலன்ஸ்கள் தற்போது உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

எனினும், இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள போர் கள ஆம்புலன்ஸ்கள், அந்த வாகனங்களிலிருந்து பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உலகின் எந்த நாடுகளில் இருந்தும் இந்த வாகனத்திற்கான முன்பதிவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாக, குறித்த வாகனத்தை வடிவமைத்துள்ள பொறியிலாளர்கள் அறிவித்துள்ளனர்.