Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
1 கிலோ பூசணிக்காயை 20 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கோரும் விவசாயிகள்
பூநகரியில் சந்தைபடுத்த முடியாமல் தேங்கியிருக்கும் ஒரு லட்சம் கிலோ கிராம் பூசணிக்காயினை, பூநகரி விவசாயிகள் 1 கிலோ பூசணிக்காயினை 20-25 ரூபாவிற்கு விற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் ஒரு லட்சம் கிலோ கிராம் பூசணிக்காய்கள் இருப்பில் இருப்பதாகவும் அதனை கொரோனா நிலமை காரணமாக தம்புள்ளை சந்தை பூட்டப்பட்டுள்ளமையால் அதனை சந்தைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதுடன் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள் பழுதடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது பல ஏக்கர் நிலத்தில் பல சிரமத்தின் மத்தியில் சென்ற முறையும் விவசாயம் செய்து கொரோனாவால் பாதிப்படைந்தோம். இம்முறையும் பெரும் நட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளோம் எனவும் இம்முறை நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. ஒரு கிலோ பூசணிக்காயினை 20 அல்லது 25 ரூபாவிற்கேனும் விற்க தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.