Kilinochchi NET

கிளிநொச்சி பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் : மர்மம் என்ன?

கிளிநொச்சி பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை தம்பகாமம் இன்நாசி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை (23) மீட்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சகோதரரால், பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டதாக பளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.