Kilinochchi NET

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் மரணம் : 4வது நபரும் சற்று முன் மரணம்

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் இன்று (22.05) மாலை மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய த.பாலகுமார் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இதேவேளை, கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.