Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும்
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. இதனை தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒருவருக்கு கூட நோயை உருவாக்கும் தன்மை உள்ளது. அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும் என்பதால், தடுப்பூசி பெற்ற பிறகும் அனைவரும் தொடர்ந்து சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தேசிய அபிவிருத்தி ஊடக மையத்தில் கோவிட் பரவுவது குறித்த அறிவியல் பகுப்பாய்வு ”என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்காக சமூக தூரத்தை பராமரிக்கவும், முகமூடி அணியவும், கைகளை கழுவவும் மற்றும் பிற சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்கள், 60 அகவைக்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாம் என்றும், தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸுக்கு எதிராகப் போராட, வழக்கமான உடற்பயிற்சி வ லுவான நோய் எதிர்ப்பு சக்தி என்பன முக்கியம், மேலும் பு கைபிடிப்பவர்கள் தங்கள் உ யிரைப் பணயம் வைக்காமல் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
N95 முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார், இல்லையெனில் துணி முகக்கவசத்துடன் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசம் சிறந்தது.
இதன்போது முதலில் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணிந்து அதன் மேல் துணி முகமூடியை அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.