Kilinochchi NET

கிளிநொச்சியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்காக 3,410 கட்டில்கள் வழங்கி வைப்பு

3,410 கட்டில்கள் வழங்கப்பட்டன

கொவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கான 3410 கட்டில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

“உயிர் மூச்சைக் காக்கம் இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இவ் வேலைத்திட்டமானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்றைய தினம் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கழகங்களினால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முதல் கட்டமாக 40 கட்டில்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.