இலங்கையில் கொரோனாவினால் 12வது உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 12வது மரணம் நிகழ்ந்துள்ளது.

தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவத்தகம, வேஉட பிரதேசத்ரைத சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் இரணவில சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவர் எனவும் இருதய நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2947 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2798 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.