Kilinochchi NET

55 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அவசர அறிவிப்பு

55 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 36 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிக ம ரணங்களும், கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுவாசிக்க பிரச்சினை போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியில்லை என்றால் வைத்தியரின் ஆலோசனைகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.