Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சிலும் அ ச்சுறு த்தலுக்கு மத்தியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த நினைவேந்தல் நிகழ்வின்போது பொதுச்சுடர் மற்றம் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

தொடர்ந்து தலைமையுரையை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து சபையின் உப தவிசாளர் சின்னையா தவபாலன் மற்றும் உறுப்பினர்களான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந்த், லலிதகுமாரி சத்தியமூர்த்தி, ஆறுமுகம் சிவநேசன், அருணாசலம் சத்தியானந்தம் ஆகியோர் நினைவுரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.