Kilinochchi NET

வவுனியாவில் அடையாள அட்டை பரிசோதனையில் பொலிஸார் : மீறியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

வவுனியாவில் அடையாள அட்டை பரிசோதனையில் பொலிஸார் : மீறியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டு வேலைக்குச் செல்வோர் தவிர , மற்றவர்கள் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியுமென அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய தேசிய அடையாள அட்டை நடைமுறையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரினுள் உள்நுழையும் பகுதிகளான புதிய பேரூந்து நிலையம் முன்பாக , குருமன்காடு சந்தி போன்ற வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அடையாள அட்டை பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை நடைமுறையின் படி பயணிக்க கூடியவர்கள் மட்டும் பொலிஸாரால் தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்கி வருவதுடன் ஏனையோர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்

இலங்கை சீன நாடாக மாறிய தருணம்: இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க சிங்களமும் சீனாவும் ஒன்றாகிற்றாங்க